அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்


அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்
x
தினத்தந்தி 14 Jun 2021 12:44 AM IST (Updated: 14 Jun 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

அரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா.

நேற்று ஒரு காரில் குர்கான்-பாட்லி-ஜாஜ்ஜர் சாலையில் சென்று கொண்டிருந்தார். காரின் முன்பக்க இருக்கையில் டிரைவர் அருகே சவுதாலா அமர்ந்திருந்தார்.அப்போது மற்றொரு காருடன், சவுதாலா பயணித்த கார் மோதியது. உடனே சவுதாலாவின் கார் ஏர் பேக்குகள் விரிந்துகொண்டன. எனவே சவுதாலாவுக்கு சிறு சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டது. காரில் இருந்த மற்றவர்களுக்கும் சிராய்ப்பு காயங்களே ஏற்பட்டன என குர்கான் போலீசார் தெரிவித்தனர்.

ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது நலமுடன் இருப்பதாக அவரது கட்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Next Story