தேசிய செய்திகள்

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 200 க்கு கீழ் குறைந்தது + "||" + Delhi reports 131 new COVID cases (positivity rate - 0.22%), 355 recoveries, and 16 deaths in the last 24 hours

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 200 க்கு கீழ் குறைந்தது

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 200 க்கு கீழ் குறைந்தது
டெல்லியில் இன்று மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,31,270 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.22 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,839 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 355 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14,03,205 ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் தற்போது 3,226 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு 2-ம் தவணை தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இன்று டெல்லி வந்தடைந்தார்
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று மாலை டெல்லிக்கு வந்து சேர்ந்தார்.
4. டெல்லியில் பிரதமர் மோடி உடன் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
5. பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் இன்று கர்நாடகம் வருகை
பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் இன்று கர்நாடகம் வருகை தருகின்றனர்.