லோக் ஜனசக்தி கட்சி எம்.பிக்கள் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி

லோக் ஜனசக்தி கட்சி எம்.பிக்கள்.கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.
புதுடெல்லி
சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட தலைவர்கள ஐக்கிய ஜனதா தளத்திற்கு தாவ உள்ளதால் அந்த கட்சி நெருக்கடியை எதிர்கொள்கிறது. மேலும் அக்கட்சியில் உள்ள 5 எம்.பி.க்கள் நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு தலைவர் பதவியில் இருந்து சிராக் பாஸ்வானை நீக்க முடிவு செய்துள்ளனர். சிராக் பாஸ்வானுக்கு பதில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஹாஜிபூர் எம்.பி. பசுபதி குமார் பராஸை புதிய தலைவராக நியமிக்க வேண்டும் என முடிவெடுத்து உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, லோக் ஜனசக்தி கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, சிராக் லோக் ஜனசக்தி கட்சி நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கக் கோரி ஒரு கடிதத்தை வழங்கியுள்ளனர்.
ஆதாரங்களின் படி லோக் ஜன்சக்தி கட்சி எம்.பி.க்கள் லோக் சபாநாயகர் ஓம் பிர்லாவை நேற்று சந்தித்து அவரிடம் ஒரு கடிதத்தை வழங்கினர். நாடாளுமன்றத்தில் லோக் ஜான்சக்தி கட்சியின் புதிய தலைவராக பசுபதி குமார் பராஸைக் கருத்தில் கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
Related Tags :
Next Story