மத்திய அரசின் தனியார் மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது - ராகுல் காந்தி


மத்திய அரசின் தனியார் மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 14 Jun 2021 3:25 PM GMT (Updated: 14 Jun 2021 3:25 PM GMT)

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தனியார்மயமாக்கல் இயக்கத்தை நடைமுறைப்படுத்தி வரும் மத்திய அரசு நடப்பு நிதியாண்டிலும் இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, பேங்க் ஆப் மராட்டியம், சென்ட்ரல் பேங்க் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டில் தனியார்மயமாக்கப்பட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது.

மாறாக, 2019 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காங்கிரஸின் குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தை கொண்டு வாருங்கள். அந்த திட்டத்தால் மக்களுக்கு உதவ முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

Next Story