எதிர்காலத்தில் பாஜகவுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைக்கலாம்: ராம்தாஸ் அத்வாலே


எதிர்காலத்தில் பாஜகவுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைக்கலாம்: ராம்தாஸ் அத்வாலே
x
தினத்தந்தி 15 Jun 2021 4:24 AM IST (Updated: 15 Jun 2021 4:24 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்கக்கூடும் என்று ராம்தாஸ் அத்வாலா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

 இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே  ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எதிர்காலத்தில்  பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைக்கக் கூடும். 

சிவசேனா ஆதரவு அளித்தால் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியும். பால் தாக்கரே கனவை நிறைவேற்ற சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது மராட்டியத்தின் எதிர்காலத்திற்கும் நல்லதாக அமையும்” என்றார். 

Next Story