அயோத்தியில் ரூ.400 கோடியில் நவீன பஸ் நிலையம்; உத்தரபிரதேச மந்திரிசபை ஒப்புதல்


அயோத்தியில் ரூ.400 கோடியில் நவீன பஸ் நிலையம்; உத்தரபிரதேச மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 15 Jun 2021 4:39 AM IST (Updated: 15 Jun 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கு சர்வதேச தரத்தில் ரூ.400 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் கட்டப்படுகிறது.

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மாநில மந்திரிசபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 9 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. அரசு-தனியார் கூட்டு அடிப்படையிலோ அல்லது மாநில அரசாலோ இந்த பஸ் நிலையம் கட்டப்படும். மேலும், அயோத்தி-சுல்தான்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு 4 வழிப்பாதை மேம்பாலம் கட்டவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது, ரூ.20 கோடியே 17 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.

Next Story