தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் இந்தியாவில் முதல் மரணம்..! + "||" + India confirms first death following Covid-19 vaccination

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் இந்தியாவில் முதல் மரணம்..!

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் இந்தியாவில் முதல் மரணம்..!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பக்க விளைவுகளால் ஏற்படும் முதல் மரணத்தை இந்தியா உறுதி செய்து உள்ளது
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2726 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர்.
 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,13,378 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 072 ஆக உள்ளது

 ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயது வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் இன்று (ஜூன் 15) வரை 151வது நாளாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 10:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30.7 சதவீதம் பேருக்கும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர்களில் 9.3 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வரும்  அரசு குழு (ஏஇஎப்ஐ)  தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் அனாபிலாக்ஸிஸ் காரணமாக முதல் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும்  பாதகமான நிகழ்வுகள் குறித்து இந்த குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இது போன்ற 31 பக்கவிளைவு கொண்டவர்களை ஆய்வுக்கு எடுத்து கொண்டது 

இந்த குழுவின்  மார்ச் 8, 2021 இல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் (கடுமையான ஒவ்வாமை எதிர்வினை) காரணமாக இறந்துள்ளார் என்பதை உறுதிபடுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும்
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
2. கொரோனா 3-வது அலை:அடுத்த 100 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்- மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா 3-வது அலை: அடுத்த 100 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. கொரோனா 3 வது அலை ஆகஸ்டில் தொடங்கும்; தினமும் 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு - மூத்த விஞ்ஞானி தகவல்
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கும் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் 5 வது பெரிய மாநிலமான தமிழகத்திற்கு குறைந்த அளவு தடுப்பூசியே ஒதுக்கீடு...! முழு விவரம்
இந்தியாவில் 5 வது பெரிய மாநிலமான தமிழகம், அதன் மக்கள் தொகைக்கு தகுதியான தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பெறவில்லை.
5. தடுப்பூசி போட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 80% டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் - ஆய்வில் தகவல்
ஆய்வு என்பது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் கொரோன பாதித்தவர்களின் மருத்துவ குணாதிசயம் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகும்.