தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 20 வரை நீட்டிப்பு


தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 20 வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2021 11:04 PM IST (Updated: 15 Jun 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வழக்கத்தை விட முன்கூட்டியே தெலங்கானா மாநிலத்தில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையானது மே 31-ந் தேதி முடிவுக்கு வந்த நிலையில், ஜூன் 15(இன்று) வரை கோடி விடுமுறை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தெலங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு தற்போது உள்ள கொரோனா சூழல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி கல்லூரிகள் ஆகிவற்றிற்கான கோடை விடுமுறை வரும் ஜூன் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story