உத்தர பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு


உத்தர பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 Jun 2021 9:18 PM GMT (Updated: 2021-06-16T02:48:51+05:30)

உத்தர பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.ஆக்ரா,


உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் படுகாயமடைந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

எனினும், செல்லும் வழியிலேயே 3 குழந்தைகளும் உயிரிழந்து உள்ளனர்.  அவர்கள் அனைவருக்கும் 3 வயது முதல் 8 வயதுக்குள் இருக்கும்.  அவர்களில் ஒரு சிறுவனும், 2 சிறுமியும் அடங்குவார்கள்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் சிக்கி கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் பிரபு சிங் கூறியுள்ளார்.


Next Story