பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பாக்கி உள்ளது - ப.சிதம்பரம் தகவல்

எல்லா மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி கொடுத்து விட்டதாக நிர்மலா சீதாராமன் சொல்வது தவறு என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டியில், எல்லா மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.டி. பாக்கியை கொடுத்து விட்டதாக கோபமாக பதில் அளித்தார். அவர் சொல்வது தவறு. அவரது கோபம் நியாயமற்றது.
நான் 3 மாநிலங்களிடம் இருந்து ஜி.எஸ்.டி. பாக்கி பற்றிய தகவல்களை திரட்டினேன். அதன்படி, பஞ்சாப் மாநிலத்துக்கு கடந்த 1-ந் தேதி நிலவரப்படி ரூ.7 ஆயிரத்து 393 கோடி ஜி.எஸ்.டி. பாக்கி உள்ளது. ராஜஸ்தானுக்கு கடந்த மே 21-ந் தேதி நிலவரப்படி, ரூ.7 ஆயிரத்து 142 கோடியும், சத்தீஷ்காருக்கு கடந்த 1-ந் தேதி நிலவரப்படி ரூ.3 ஆயிரத்து 69 கோடியும் பாக்கி உள்ளது. மற்ற மாநிலங்களின் பாக்கி விவரத்தையும் திரட்ட முயன்று வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story