மும்பையில் பலத்த மழை- கடும் போக்குவரத்து நெரிசல்

மும்பையில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மும்பை,
மும்பையில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஒரிரு இடங்களில் வெள்ளநீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழை காரணமாக போக்குவரத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல மீட்டர்கள் தொலைவுக்கு அணி வகுத்து நின்றன. எனினும், வழக்கம் போல மின்சார ரெயில் சேவை மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பையின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 28.5 மி.மீ. அளவு பெய்து உள்ளது. கடந்த வாரம் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் நகர் முழுவதும் வெள்ளாக்காடாகி ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story