தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து + "||" + Corona Spread: Amarnath pilgrimage canceled this year too

கொரோனா பரவல்: அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து

கொரோனா பரவல்: அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து
கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா அறிவித்து உள்ளார்.
ஸ்ரீநகர்,

இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத்குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் 2 மாதங்கள் நடைபெறும் இந்த புனித யாத்திரையில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் கொரோனாவின் 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்துசெய்யப்படுவதாகவும், வெறும் அடையாள ரீதியான யாத்திரை மட்டுமே நடைபெறும் எனவும் காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா அறிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு: மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே
கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.
2. கொரோனா பரவல் எதிரொலி: திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
திருப்பூர் மாவட்டத்தில் 3-வது அலை கொரோனா பரவலை தடுக்க காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவை மட்டுமே இயங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
3. கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள்: சென்னை ஐகோர்ட்டில், அரசு அறிக்கை
கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
4. கொரோனா பரவல் தடுப்பு பணிகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
கொரோனா பரவல் தடுப்பு பணிகள் பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
5. கொரோனா பரவல்; பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்
கொரோனா பரவலை முன்னிட்டு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.