கேரளாவில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு

கேரளாவில் 3 பேருக்கு உருமாறிய வகையை சேர்ந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் முதல் அலையை விட 2வது அலையில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை நாடு சந்தித்தது. இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்டா வகை கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வகை இந்தியாவில் இல்லை என்று நம்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், கேரளாவில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் உள்ள பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story