கலெக்டர் அலுவலக திறப்புவிழாவில் முதல்வரின் காலில் விழுந்த கலெக்டர் விளக்கம்


கலெக்டர் அலுவலக திறப்புவிழாவில் முதல்வரின் காலில் விழுந்த கலெக்டர் விளக்கம்
x
தினத்தந்தி 22 Jun 2021 4:39 AM GMT (Updated: 2021-06-22T10:09:24+05:30)

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை கலெக்டர் அலுவலக திறப்புவிழா நிகழ்வின்போது, முதல்வரின் காலில் கலெக்டர் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

ஐதராபாத்

தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சித்திப்பேட்டை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரெண்டு எம்.எல்.ஏ அலுவலகம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வளாகம் தொடக்க விழாவின்போது, சித்திப்பேட்டை கலெக்டர் பி.வெங்கட்ராம ரெட்டி முதல்வர் சந்திரசேகர ராவின் காலில் விழும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இந்த வீடியோ ஆன்லைனில் வைரலாகி பல விமர்சனங்கள் எழுந்தது.

இதற்கு விளக்கமளித்த சித்திப்பேட்டை மாவட்ட கலெக்டர் பி.வெங்கட்ராம ரெட்டி, “ தெலங்கானா முதல்வர் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். இதனை ஒரு தெலங்கானாவின் குழந்தையாக, அதிகாரியாக என் கண்களால் பார்க்கிறேன். மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்காக முதல்வரின் ஆசியை பெற்றேன். முதல்வர் எனக்கு ஒரு  தந்தை உருவம் போன்றவர், நல்ல நிகழ்வுகளின் போது பெரியவர்களின் ஆசீர்வாதங்களை பெறுவது தெலங்கானாவின் பாரம்பரியம். தந்தையர் தினத்தில் அவரின் ஆசியை பெற்றது மகிழ்ச்சி" என்று கூறினார்.


Next Story