கொரோனா விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் - சந்திரசேகர ராவ்


கொரோனா விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் - சந்திரசேகர ராவ்
x
தினத்தந்தி 23 Jun 2021 1:15 PM IST (Updated: 23 Jun 2021 1:15 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர்களின் ஆலோசனைப்படி நடந்தால், கொரோனாவில் இருந்து மீளலாம் என தெலுங்கான முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் அம்மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறிகள் உள்ளதால் அவரை தனிமைபடுத்திக்கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். பின்னர் தொற்றில் இருந்து மீண்டார்.

இந்நிலையில், டாக்டர்களின் ஆலோசனைப்படி நடந்தால் கொரோனாவில் இருந்து மீளலாம் என சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

வாரங்கலில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி கே.சி.ராவ் பேசியதாவது:-

எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின் டாக்டர்கள் பரிந்துரைத்தபடி,

 நான் பாராசிட்டமால் மற்றும் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய மருந்துகளை உட்கொண்டேன். ஒரு வாரத்தில் கொரோனாவில் இருந்து மீள முடிந்தது.

 ஊடகங்கள் கொரோனா பற்றி மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பயத்தை உருவாக்கவும் முயற்சி வேண்டாம். ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

Next Story