கேரளாவில் மேலும் 12,787- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 1,24,326- பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறையாமல் ஒரே சீரான எண்ணிக்கையில் இருந்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று 150- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 13,683- பேர் குணம் அடைந்துள்ளனர்.
கேரளாவில் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,445- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு விகிதம் 10.29 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 99,390- ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 1,24,326- பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story