‘உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கடவுள் கையில்தான் உள்ளது’ - பிரியங்கா காந்தி


‘உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கடவுள் கையில்தான் உள்ளது’ - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 24 Jun 2021 7:49 AM IST (Updated: 24 Jun 2021 7:49 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கடவுள் கையில்தான் உள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் மதுராவில் ரவுடிகள் சிலர் 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததோடு அவளை 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனர். ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ‘மக்கள் உயிர் பயத்தில் நடுங்குகிறார்கள், ஆனால் அரசாங்கம் உறங்குகிறது’. 

மதுராவில் ரவுடிகளின் அட்டகாசத்தால் சிறுமி உயிருக்கு போராடுகிறாள். காட்டாட்சியில், பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Next Story