கேரளாவில் இன்று 12 ஆயிரம் பேருக்கு கொரோனா - 136 பேர் பலி


கேரளாவில் இன்று 12 ஆயிரம் பேருக்கு கொரோனா - 136 பேர் பலி
x
தினத்தந்தி 24 Jun 2021 10:58 PM IST (Updated: 24 Jun 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இன்று 12 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 12 ஆயிரத்து 78 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 54 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 859 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 11 ஆயிரத்து 469 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 41 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 136 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் விகிதம் 10.37% என்ற அளவில் உள்ளது.
1 More update

Next Story