டெல்லியில் திங்கள் கிழமை முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி


டெல்லியில் திங்கள் கிழமை முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி
x
தினத்தந்தி 27 Jun 2021 12:16 AM IST (Updated: 27 Jun 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஏற்பட்ட மிகக்குறைந்தபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும்.  

தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதையடுத்து, மேலும் சில தளர்வுகளை டெல்லி அறிவித்துள்ளது. இதன்படி, உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் ஆகியற்றை திங்கள் கிழமை முதல் மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் பேருடன் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல்,  திருமண மண்டபங்கள் போன்றவற்றில் திருமணங்கள் நடத்தவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் 50- பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளை விரைவாக அறிவிப்பது தொற்று பாதிப்பு உயர வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ள நிலையில், டெல்லியில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Next Story