மராட்டியத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 7.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி


மராட்டியத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 7.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 26 Jun 2021 7:52 PM GMT (Updated: 26 Jun 2021 7:52 PM GMT)

3-வது அலை தாக்கத்தை குறைக்க 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

மும்பை, 

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்தநிலையில் மராட்டியத்தில் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு முடுக்கிவிட்டு உள்ளது. குறிப்பாக 3-வது அலை தாக்கத்தை குறைக்க 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் 7 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மந்திரி ஆதித்ய தாக்கரே நேற்று இரவு டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், "மாநிலத்தில் நேற்று 7 லட்சத்து 31 ஆயிரத்து 175 பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 3 கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 723 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, மருந்து கல்வித்துறை உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்து உள்ளார்.

Next Story