புதுவை சபாநாயகருக்கு, மக்களவை தலைவர் ஓம்பிர்லா பாராட்டு


புதுவை சபாநாயகருக்கு, மக்களவை தலைவர் ஓம்பிர்லா பாராட்டு
x
தினத்தந்தி 27 Jun 2021 8:53 AM IST (Updated: 27 Jun 2021 8:53 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபை தலைவர் ஏம்பலம் செல்வத்துக்கு, மக்களவை தலைவர் ஓம்பிர்லா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டசபை தலைவர் ஏம்பலம் செல்வத்துக்கு, மக்களவை தலைவர் ஓம்பிர்லா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டுக்கள். பேரவை தலைவர் சட்ட பேரவையை ஒழுங்குபடுத்துவதோடு மட்டுமில்லாமல், நாட்டின் அரசியல் அமைப்பின் நடவடிக்கையையும் பேணிக்காக்க வேண்டும். அந்த வகையில் தங்களின் கடமையை சிறப்பாக செய்வதற்கு வாழ்த்துகள். நாடாளுமன்றத்தின் வழிமுறைகளை பின்பற்றி, நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story