ஆந்திர பிரதேசம்: வரும் 1ந்தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள்; முதல் மந்திரி அலுவலகம் அறிவிப்பு


ஆந்திர பிரதேசம்:  வரும் 1ந்தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள்; முதல் மந்திரி அலுவலகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2021 12:02 PM GMT (Updated: 28 Jun 2021 12:02 PM GMT)

ஆந்திர பிரதேசத்தில் ஜூலை 1-7 வரையிலான நாட்களில் ஊரடங்கு தளர்வுகள் பற்றி முதல் மந்திரி அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

விஜயவாடா,

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்த நிலையில், முதல் மந்திரி அலுவலகம் ஊரடங்கு தளர்வுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, கொரோனா பாதிப்பு விகிதம் 5%க்கு குறைவாக உள்ள மாநிலத்தின் 8 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கில் தளர்வுகள் அனுமதிக்கப்படும்.

எனினும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு தொடரும்.  இரவு 9 மணி முதல் மதுபான விற்பனை கடைகள், உணவு விடுதிகள் மற்றும் பிற கடைகள் மூடப்படும்.  இந்த தளர்வுகள் வருகிற ஜூலை 1ந்தேதி முதல் 7ந்தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.


Next Story