கொரோனா தடுப்பூசி: இந்தியா உள்ளிட்ட டாப் 5 நாடுகளின் பட்டியல் வெளியீடு


கொரோனா தடுப்பூசி:  இந்தியா உள்ளிட்ட டாப் 5 நாடுகளின் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 28 Jun 2021 5:11 PM GMT (Updated: 28 Jun 2021 5:29 PM GMT)

கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையில் இந்தியா உள்ளிட்ட டாப் 5 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் உலக அளவில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவில், கொரோனா பாதிப்புகளை தடுக்க அவசரகால தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  இதன்பின் கடந்த மே 1ந்தேதி முதல் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு கூறியது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் இன்று கூறினார்.

இதனால், மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்திய எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்தி இந்தியா வரலாறு படைத்து உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த டிசம்பர் 8ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  எனினும், அந்நாட்டில் 32 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து 328 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

இந்த வரிசையில், இங்கிலாந்து (7,67,74,990), ஜெர்மனி (7,14,37,514), பிரான்ஸ் (5,24,57,288) மற்றும் இத்தாலி (4,96,50,721) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


Next Story