தேசிய செய்திகள்

இளம் மனைவியை கொலை செய்து மருத்துவமனை பின்புறம் எரித்து விட்டு கொரோனா நாடகமாடிய கணவர் + "||" + Andhra Pradesh: Tirupati womens murder mystery solved confirms husband as the accused

இளம் மனைவியை கொலை செய்து மருத்துவமனை பின்புறம் எரித்து விட்டு கொரோனா நாடகமாடிய கணவர்

இளம் மனைவியை கொலை செய்து மருத்துவமனை பின்புறம் எரித்து விட்டு கொரோனா நாடகமாடிய கணவர்
மனைவியை கொலை செய்து அரசு மருத்துவமனை பின்புறம் எரித்து விட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பதி

திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண் உடல்  கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்திய போலீசார்,அந்தப் பகுதியில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.

புங்கனூர் மண்டலத்தில் உள்ள ராமசாமுத்திரத்தைச் சேர்ந்த அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த டெக்கி  புவனேஸ்வரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாயமானது தெரியவந்தது. 

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது  புவனேஸ்வரியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி வீட்டில் கொலை செய்து உடலை  மருத்துவமனையின் வளாகத்தில் எரித்தது தெரியவந்தது. புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து உடலை சூட்கேசில் எடுத்து வந்து அங்கு தீவைத்து எரித்தது தெரியவந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.     

உறவினர்களிடம் ஸ்ரீகாந்த் ரெட்டி தனது மனைவி கொரோனா டெல்டா  வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் அங்கு அவர் இறந்து விட்டதாகவும்  கூறி உள்ளார்.  கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததால் உடலை  கொடுக்கவில்லை என கூறி நாடகமாடி உள்ளார். போலீசார் விசாரணையில் ஸ்ரீகாந்த் ரெட்டி நாடகம் அம்பலமானது.

தொடர்புடைய செய்திகள்

1. கோட்டப்பட்டி அருகே புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது
கோட்டப்பட்டி அருகே புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.
2. பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய கணவர் கைது
பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய கணவர் கைது
3. பல ஆண்களுடன் தொடர்பு: மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கைது
தீப்தி சோனியை திட்டமிட்டு அவரது கணவர் தேவேந்திரா, பிரதீப் சோனி மற்றும் அவரது மனைவி ஷாலு ஆகியோர் கொலை செய்துள்ளனர்.