கேரளாவில் இன்று மேலும் 13,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 142 பேர் உயிரிழப்பு


கேரளாவில் இன்று மேலும் 13,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 142 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 2:53 PM GMT (Updated: 2021-06-30T20:23:55+05:30)

கேரளாவில் இன்று மேலும் 13,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 13,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில்இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,24,165 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 9,17 சதவீதமாக உள்ளது.

மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 142 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,235 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 11,808 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 28,09,587 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,00,881 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Next Story