வங்கி கடன் மோசடி வழக்கு: மும்பை நிறுவனத்தின் ரூ.185 கோடி சொத்துகள் முடக்கம்

பாங்க் ஆப் இந்தியாவின் 14 வங்கி கிளைகளில் ரூ.3 ஆயிரத்து 592 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
புதுடெல்லி,
மும்பையை சேர்ந்த பிரோஸ்ட் இன்டர்நேசனல் லிமிடெட் என்ற நிறுவனம் போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாங்க் ஆப் இந்தியாவின் 14 வங்கி கிளைகளில் ரூ.3 ஆயிரத்து 592 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது கண்டறியப்பட்டதை அடுத்து, அதிரடி நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.185 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்துகள் மும்பை, கான்பூர், டெல்லி, குர்கிராம், கொல்கத்தா மற்றும் தமிழ்நாட்டின் சில நகரங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவை ஆகும்.
Related Tags :
Next Story