வேலையில்லாத படித்த இளைஞர்கள் பகோடா விற்பதற்கு பா.ஜனதா, காங்கிரசே பொறுப்பு: மாயாவதி


வேலையில்லாத படித்த இளைஞர்கள் பகோடா விற்பதற்கு பா.ஜனதா, காங்கிரசே பொறுப்பு: மாயாவதி
x
தினத்தந்தி 1 July 2021 8:07 PM GMT (Updated: 2021-07-02T01:37:39+05:30)

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசத்திலும், நாடு முழுவதும் கோடிக்கணக்கான படித்த, வேலையில்லாத இளைஞர்கள் சாலையோரங்களில் பகோடா விற்றுக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்துக்காக தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அதை பார்க்கும் அவர்களது குடும்பத்தினரின் வேதனை புரிகிறது. இந்த நிலைமைக்கு நாட்டையும், பல மாநிலங்களையும் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனதா, காங்கிரஸ் அரசுகள்தான் பொறுப்பு. காங்கிரசின் அடிச்சுவட்டை பின்பற்றினால், பா.ஜனதாவுக்கும் அதே கதிதான் ஏற்படும். தனது செயல்பாடுகளால் மத்தியிலும், பல மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதை பா.ஜனதா தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story