இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 2 July 2021 9:33 AM IST (Updated: 2 July 2021 9:33 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு உச்சம் பெற்று தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக வேகமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் இருந்து வருகிறது. 

அந்த வகையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 46,617- பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 853- பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 04 லட்சத்து 58 ஆயிரத்து 251- ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 302- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 09 ஆயிரத்து 637 ஆக உள்ளது.  இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 312 ஆக உயர்ந்துள்ளது. 

1 More update

Next Story