கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி


கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி
x
தினத்தந்தி 2 July 2021 6:33 PM IST (Updated: 2 July 2021 6:33 PM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்படுகிறது. கோவின் தளத்தில் பதிவு செய்த பின்னர் அல்லது அருகிலுள்ள தடுப்பூசி முகாம்களுக்கு நேரில் சென்று பதிவு செய்த பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நெறிமுறைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியால் கர்ப்பிணி பெண்களுக்கு சோர்வு அல்லது பக்கவிளைவுகள் ஏற்படாது என எய்ம்ஸ் மருத்துவர்கள், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story