சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் : யோகி ஆதித்யநாத் நம்பிக்கை


சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் : யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
x
தினத்தந்தி 4 July 2021 11:26 AM IST (Updated: 4 July 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 லக்னோ,

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்) பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 75 இடங்களில் 67-ல் பாஜக வென்றது. பாஜகவின் மிகப்பெரும் வெற்றியை அடுத்து அம்மாநில முதல்வரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத் கூறியதாவது: -

மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக 75 இடங்களில் 67 இடங்களில் வென்றுள்ளது. பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 2022ம் ஆண்டில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும். பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோரின் வழிகாட்டலில் இந்த வெற்றி கிடைத்துள்ளது” என்றார். 

Next Story