இங்கிலாந்து புறப்பட்டு சென்றார், ராணுவ தளபதி நரவனே

ராணுவ தளபதி நரவனே, இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றார். இரு தரப்பு ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ராணுவ தளபதி இங்கிலாந்து பயணம்
ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, இங்கிலாந்து, இத்தாலி நாடுகளில் அரசு முறையிலான சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று அவர் தலைநகர் டெல்லியில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுச்சென்றார்.அங்கு அவர் அந்த நாட்டின் ராணுவ மந்திரி பென் வாலஸ், ராணுவ தளபதி, பொதுப்பணியாளர் தலைவர் மற்றும் முக்கிய
பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இப்போது இந்திய, இங்கிலாந்து ராணுவ உறவுகளைப் பலப்படுத்துவது பற்றி விவாதிக்கப்படுகிறது.அங்கு பல்வேறு ராணுவ அமைப்புகளுக்கு நேரில் சென்று பார்வையிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் பரஸ்பர நலன்களைப்பற்றிய விருப்பங்களைப் பகிர்ந்துகொள்வார்.
இத்தாலி பயணம்
இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அவர் 7-ந் தேதியும், 8-ந் தேதியும் இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அந்த நாட்டின் ராணுவ தலைவர், ராணுவ தலைமைத்தளபதி ஆகியோருடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துவார். இது இரு தரப்பு ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.மேலும், காசினோ
நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ நினைவுச்சின்னத்தையும் நரவனே திறந்து வைக்கிறார். ரோம் நகரில் உள்ள இத்தாலி ராணுவத்தின் ஐ.இ.டி. சிறப்பு மையத்தில் அவர் உரையாற்றவும் ஏற்பாடு ஆகி உள்ளது.
இந்த தகவல்களை இந்திய ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story