ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் கூட்டுக்குழு விசாரணையை மோடி அரசு விரும்பாதது ஏன்? ராகுல்காந்தி கேள்வி


ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் கூட்டுக்குழு விசாரணையை மோடி அரசு விரும்பாதது ஏன்? ராகுல்காந்தி கேள்வி
x
தினத்தந்தி 5 July 2021 1:12 AM IST (Updated: 5 July 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து பிரான்ஸ் அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மோடி அரசு, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாராக இல்லாதது ஏன்? 1. குற்றமுள்ள மனம். 2. நண்பர்களை காப்பாற்றுவதற்காக. 3. நாடாளுமன்ற கூட்டுக்குழு, மாநிலங்களவை எம்.பி. சீட்டை விரும்பாது. 4. மேற்கண்ட மூன்றுமே சரி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story