தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு ஓவைசி பதிலடி + "||" + Criminals Who Don't Know...": Asaduddin Owaisi On RSS Chief's Remarks

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு ஓவைசி பதிலடி

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு ஓவைசி பதிலடி
இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியவற்றர்கள் என மோகன் பகவத் கூறியிருந்தார்.
ஐதராபாத்,

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் முஸ்லிம் ராஷ்டீரிய மஞ்ச் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியவற்றர்கள்.  பசுக்காவலர் என்ற பெயரில் தாக்குவது நடத்துவது இந்துத்வா அல்ல. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தை உருவாக்க சிலர் நினைக்கின்றனர். இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற தவறான பிரசாரத்தில் முஸ்லீம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது. 

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான பணியை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்துவிடக்கூடாது.  இரு மதங்களுக்க்கு இடையேயான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். ஜனநாயக நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ளக்கூடாது. அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணமே மனதில் இருக்க வேண்டும்” என்றார்.

மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு அசாதுதின் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஓவைசி கூறியிருப்பாதவது:-

பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவிற்கு எதிரானது என ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் கூறுகிறார், ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெஹ்லு, அக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை அடித்துக் கொல்ல வேண்டும் என்று  மட்டும் தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்தவில்லை: மோகன் பகவத் சொல்கிறார்
இந்திய மக்களின் மரபணு 40,000 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது. நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர் தான் என மோகன் பகவத் கூறியுள்ளார்.
2. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிக்கான வழி பிறந்துள்ளது: மோகன் பகவத்
காஷ்மீரில் தேர்தல் விரைவில் நடக்கும், புதிய அரசு அங்கு உருவாகும் என்று மோகன் பகவத் பேசினார்.
3. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கொள்கை இருக்க வேண்டும்: மோகன் பகவத்
நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
4. இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்ற வேண்டும்; மோகன் பகவத்
எந்த அளவு சுய சார்பு மிக்க நாடாக இருக்கிறதோ அந்த அளவு பாதுகாப்பான நாடாக இருக்கும் என மோகன் பகவத் கூறினார்.