ராஜஸ்தானின் ஜோத்பூரில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்


ராஜஸ்தானின் ஜோத்பூரில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 6 July 2021 5:02 PM GMT (Updated: 6 July 2021 5:02 PM GMT)

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜெய்பூர்,

இந்தியா முழுவதும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், தடுப்பூசி மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கி, அவர்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஊரக பகுதிகளில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என நம்புவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story