முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில் கொள்ளையர்களால் கிட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் துணிகளை துவைத்து வந்த ராஜூ (வயது 24) என்பவர் தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜூவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
காங்கிரஸ், பாஜகவில் இருந்த ரெங்கராஜன் குமாரமங்கலம் சேலம், திருச்சி தொகுதி எம்.பியாக இருந்துள்ளார். ரெங்கராஜன் குமாரமங்கலம் கடந்த 2000-ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.
Related Tags :
Next Story