கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை 2 மாதத்தில் தொடங்கும் - மந்திரி ஆர்.அசோக் பேட்டி


கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை 2 மாதத்தில் தொடங்கும் - மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2021 3:22 AM IST (Updated: 8 July 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை இன்னும் 2 மாதத்தில் தொடங்கும் என்று மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், தொட்டபள்ளாபுராவில் நடைபெற்ற பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா 3-வது இன்னும் 2 மாதத்தில் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அனைத்து பிரிவு டாக்டர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகள் நலப்பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக குழந்தைகள் ஆஸ்பத்திரி தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வைரஸ் பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் கொரானா பரவலை தடுக்க பொதுமக்கள் அரசின் வழிகாட்டு தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அரசின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் சரியான முறையில் பின்பற்றினால் மட்டுமே, கொரோனா 3-வது அலையை நம்மால் தடுக்க முடியும். இதை உணர்ந்து பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
1 More update

Next Story