போராடும் விவசாயிகள் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வேண்டும்: விவசாய தலைவர் வலியுறுத்தல்


போராடும் விவசாயிகள் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வேண்டும்:  விவசாய தலைவர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 July 2021 9:14 AM IST (Updated: 8 July 2021 9:14 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று விவசாய தலைவர் வலியுறுத்தி உள்ளார்.


சண்டிகர்,

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அவர்களது போராட்டம் நீடித்தபடி உள்ளது.  மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாரதீய கிசான் யூனியன் என்ற  விவசாய அமைப்பின் தலைவர் குர்ணம் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளார்.  இது விவசாயிகளிடையே சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.  விவசாயிகளின் போராட்டம் திசை திரும்பி செல்லும் சூழலும் காணப்படுகிறது.

இதனால், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் தொடங்கிய விவசாயிகள் அரசியலில் நுழைய கூடிய சாத்தியமும் ஏற்பட்டு உள்ளது.


Next Story