ஜம்மு காஷ்மீர்: கடந்த 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: கடந்த 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 8 July 2021 12:45 PM IST (Updated: 8 July 2021 12:45 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று தனித்தனி மோதல்களில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீர் குல்கம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த  மோதல்களில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தின் சோடார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல்வேட்டை  மேற்கொண்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இந்த மோதலில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புல்வாமாவில் நடந்த ஒரு  மோதலில் மேலும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஹிண்டுவால் என்கவுண்டரில் ஒரு சஹிஸ்புல் பயங்கரவாதி, மெஹ்ராசுதீன் ஹல்வாய் அல்லது உபைத் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி(IGP) விஜய் குமார் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், இதில் இருவர் லஷ்கர்-இ- தொய்பா மற்றும் ஒருவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு பயங்கரவாதிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இந்த 5 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் லஷ்கர்-இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரும் குல்காம் பகுதியில் சுடப்பட்டனர்.

புதன்கிழமை நடைபெற்ற சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் மெஹ்ரசுதீன் ஹல்வாய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் பாதுகாப்புப் படையினரை கொன்றது உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்.

மேலும், தொடர்ந்து பயங்கரவாதிகள் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

Next Story