டெல்லி சி.பி.ஐ. கட்டிடத்தில் திடீர் புகை; ஊழியர்கள் பதறியடித்து ஓட்டம்

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கட்டிடத்தில் திடீர் புகை ஏற்பட்ட நிலையில் ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) அமைப்பின் கட்டிடம் அமைந்துள்ளது. இதில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு குறிப்பிட்ட அளவிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கட்டிடத்தில் திடீரென இன்று புகை கசிந்தது. இதனால், அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். அந்த கட்டிடத்தில் இருந்த ஜெனரேட்டரில் மின் கசிவு ஏற்பட்டதில் புகை வெளியேறி உள்ளது என தெரிய வந்துள்ளது.
இதனால் தீ விபத்து அல்லது பொருட்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கட்டிட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறிது நேரத்தில் இயல்பு நிலை திரும்பும் என சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story