இந்தியாவில் வெயில் - அதிக குளிர் காரணமாக 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்


இந்தியாவில் வெயில் - அதிக குளிர் காரணமாக 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்
x
தினத்தந்தி 9 July 2021 1:13 PM IST (Updated: 9 July 2021 1:13 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் வருடந்தோறும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக குளிர் காரணமாக 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி

பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வினை தி லேன்செட் பிளானட்டரி ஹெல்த்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளதாகவும், இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என்பதை காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் அசாதாரண குளிரால் ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story