உத்தர பிரதேசத்தில் இருவருக்கு கப்பா வகை கொரோனா பாதிப்பு


உத்தர பிரதேசத்தில் இருவருக்கு கப்பா வகை கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 9 July 2021 3:42 PM IST (Updated: 9 July 2021 3:42 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் இருவருக்கு கப்பா ( பி.1.617.1) வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. லக்னோ கிங் ஜார்ஜ் மெடிக்கல் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் நடந்த மரபணு வரிசைமுறை மாதிரிகள் சோதனையில் இருவருக்கு கப்பா வகை தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 107- பேருக்கு டெல்டா பிளஸ் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இது பற்றி கூறுகையில், “ தற்போது பாசிட்டிவ் என முடிவுகள் வந்திருக்கிற இரு வகையான கொரோனா வைரஸ்களும் ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் காணப்பட்டவைதான். எனினும்  கொரோனா வைரசின் மரபணு வரிசை முறையை கண்டறிய கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்”  என்றார். 

Next Story