கேரளாவில் ஜிகா வைரஸை தடுக்க புதிய செயல் திட்டம் - சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்


கேரளாவில் ஜிகா வைரஸை தடுக்க புதிய செயல் திட்டம் - சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
x
தினத்தந்தி 9 July 2021 10:16 PM IST (Updated: 9 July 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஜிகா வைரஸை தடுக்க துரிதமான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான செறுவார கோணம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கர்ப்பணி பெண், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டன. 

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண் மருத்துவ சிகிச்சைக்காக தங்கி இருந்த வாடகை வீட்டின் அருகே இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மருத்துவமனைகளை மையமாகக் கொண்டு துரிதமான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், கர்ப்பம் அடைய வாய்ப்புள்ள பெண்கள் கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story