தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல் + "||" + Corona spread: Full curfew in Kerala today and tomorrow

கொரோனா பரவல்: கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்

கொரோனா பரவல்: கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொற்று விகிதம் படிப்படியாக குறைந்ததால் வார நாட்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பஸ், வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில்கள் உட்பட வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வார இறுதி நாட்களில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. 

மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது என அரசு அறிவித்து உள்ளது. ஓட்டல்களில் ஆன்லைன் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மருத்துவம், சுகாதாரம், பத்திரிகை வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. டெல்லியில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை
டெல்லியில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தீவிர நோய் பாதிப்பு பகுதியான கேரளா..! - ஆய்வில் தகவல்
விலங்குகளால் அதிகளவில் நோய் பரவும் தீவிர பாதிப்பு பகுதியாக சீனாவை தொடர்ந்து கேரளா உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.