உத்தரபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி - 3 பேர் மாயம்

உத்தரபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் ஒருகுடும்பத்தை சேர்ந்த 15 பேர் நேற்று அம்மாநிலத்தின் அயோத்தியா அருகே குப்தர்காட் பகுதியில் உள்ள சரயு ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.
ஆக்ராவில் இருந்து சுற்றுப்பயணமாக அயோத்தியா வந்த அவர்கள் ஆற்றில் குளித்திக்கொண்டிருந்த போது குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஆற்றில் திடீரென மூழ்கினர். அவர்களை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்கள் முயன்ற போது 15 பேரும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர்.
உடனடியாக அக்கம்பக்கம் நின்றவர்கள் இது குறித்து போலீசார், மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்ததுடன், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஆற்றில் மூழ்கிய 6 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், எஞ்சிய 9 பேரும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 9 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் ஆற்றில் மூழ்கிய 9 பேரில் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டனர். எஞ்சிய 3 பேரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story