டெல்லியில் இன்று 53-பேருக்கு கொரோனா - தொற்று பாதிப்பு விகிதம் 0.07- ஆக சரிவு

டெல்லியில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 743- ஆக குறைந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் குறையத்தொடங்கியுள்ளது. டெல்லியிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. அங்கு தினசரி பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை இன்று அங்குள்ள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
டெல்லியில் இன்று 53- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 99- பேர் குணம் அடைந்துள்ளனர். அதேபோல், தொற்று பாதிப்புக்கு இன்று 3-பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.07-சதவிகிதமாக குறைந்துள்ளது. டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 743- ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 76 ஆயிரத்து 823- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story