323 எம்.பி.க்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர் - ஓம் பிர்லா


323 எம்.பி.க்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர் - ஓம் பிர்லா
x
தினத்தந்தி 12 July 2021 11:32 PM IST (Updated: 13 July 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

323 எம்.பி.க்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

புதுடெல்லி

நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடவுள்ளது.  இதுபற்றி சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறும்போது, நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் வருகிற 19ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 13ந்தேதி வரை நடைபெறுகிறது.

19 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும்.  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடரானது காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை வேலை நாட்களில் நடைபெறும் என அறிவித்து உள்ளார்.

இதன்பின்னர் நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் பற்றி சபாநாயகர் ஆய்வு மேற்கொண்டார்.

பாரளுமன்றம் கூட உள்ள நிலையில், 441- எம்.பிக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:- 

மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும். இதுவரை 323 எம்.பி.க்கள் முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 23 எம்.பி.க்கள், மருத்துவ காரணங்களுக்காக, ஒரு டோஸ் கூட போட இயலவில்லை.

தடுப்பூசி போடாதவர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு முன்பு ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்துவோம். இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கும். காலை 11 மணிக்கு சபை கூடும் என்றார்.

Next Story