ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
புதுடெல்லி,
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் மோடி நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற கலந்துரையாடல் காணொலி வாயிலாக நடைபெற்றது. வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமரின் இந்தக்கலந்துரையாடல் அமைந்தது.
இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்ல உள்ளனர். இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழுவாகும். 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பதும் இதுவே முதல்முறையாகும்.
Related Tags :
Next Story