உத்தரகாண்டில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து - மாநில அரசு அறிவிப்பு


உத்தரகாண்டில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து - மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 July 2021 11:58 PM IST (Updated: 13 July 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு தடை விதித்துள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெறும். இந்த யாத்திரையை மேற்கொள்ளும் சிவபக்தர்கள் ‘கன்வாரியாக்கள்’ என்று அழைக்கப்படுவர். இந்த யாத்திரையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தளங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்துச் செல்வார்கள். 

அவ்வாறு எடுக்கப்பட்ட கங்கை நீரை தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் நடத்துவார்கள். இந்த யாத்திரைக்குப் பெயர் கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டும் கன்வர் யாத்திரை நடத்துவதற்கு உத்தரபிரதேச அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதையடுத்து உத்தரகாண்ட் மாநில அரசு இது குறித்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், இன்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆண்டு கன்வர் யாத்திரையை தடை செய்வதாக அறிவித்துள்ளார். கொரோனா 3வது அலை பரவல் அபாயம் மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கள் இருப்பதால் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாகவும், பக்கத்து மாநிலங்களில் இருந்து காவல்துறை அனுமதியும் லாரிகளில் கங்கை நீரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story