வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்: கேரள கவர்னர் ஆரிப் முகமது பங்கேற்கிறார்

கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக இன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது பங்கேற்கிறார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சில வருடங்களாக வரதட்சணை கொடுமை அதிகரித்து வருவதாகவும் வரதட்சணை கொடுமை காரணமாக மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் வரதட்சணை கொடுமைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும் கேரளாவில் காந்திய இயக்கங்கள் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது பங்கேற்கிறார். இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை காந்தி பவனில் நடைபெறும் கவர்னர் ஆரிப் முகமது கலந்து கொள்வார் என்று கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story