மாநிலங்களிடம் 1.51 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்


மாநிலங்களிடம் 1.51 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 14 July 2021 2:54 PM IST (Updated: 14 July 2021 2:54 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி, 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களிடம் 1.51 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 39 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 220 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 38,07,68,770 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. 

தற்போது 1 கோடியே 51 லட்சத்து 52 ஆயிரத்து 450 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மேலும், 30,250 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 37,14,441 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 
1 More update

Next Story